search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்கேஜி வகுப்புகள்"

    சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார். #cmedappadipalanisamy #lkgandukg
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் சோதனை முயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில்  3 ஆண்டுகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது.

    அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிகளில் ஜனவரி முதல் இந்த வகுப்புகள் துவங்க ஏற்பாடு நடைபெற்றது.

    இந்நிலையில்,சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

    7 குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான வரும் கல்வி ஆண்டில் ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #cmedappadipalanisamy #lkgandukg
    தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். #LKG #KPAnbazhagan
    தர்மபுரி:

    தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி. வகுப்புக்கு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இது குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய-நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தர்மபுரி ஒன்றியத்தில் ராஜாதோப்பு, குண்டலப்பட்டி, புளியம்பட்டி, ஆட்டுக்காரம்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமாரசாமிபேட்டை, 4வது வார்டு சாலை விநாயகர் கோவில் தெரு, சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் என 9 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தேங்காமரத்துப்பட்டி, கமலநத்தம், ஓமல்நத்தம், காளேகவுண்டனூர், ஏறுபள்ளி, நெக்குந்தி, இ.கே.புதூர், மேல்பூரிக்கல், பாப்பம்பட்டி மற்றும் சோளியானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 10 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    பென்னாகரம் ஒன்றியத்தில் மஞ்சாரஅள்ளி, நல்லாம்பட்டி, திகிலோடு, நாகமரை, பளிஞ்சரஅள்ளி, அஞ்சேஅள்ளி, ஏ.எட்டியாம்பட்டி, வேலம்பட்டி, கிட்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, வத்தல்பட்டி, கோடிஅள்ளி (ஜக்கம்பட்டி ), நாகனூர், மற்றும் வெள்ளமண்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 14 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    கோப்புப்படம்

    பாலக்கோடு ஒன்றியத்தில் சிங்காடு, மேல்சந்திராபுரம், பாலக்கோடு உருது மற்றும் திருமல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 4 பள்ளிகளிலும், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜம்பூத், அடிலம், கெரகோடஅள்ளி, பல்லேனஅள்ளி, சொன்னம்பட்டி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, நாகணம்பட்டி, கொல்லப்பட்டி, கதிரம்பட்டி மற்றும் அ.முருகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 11 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    மொரப்பூர் ஒன்றியத்தில் அஸ்தகிரியூர், புளியம்பட்டி, அம்பாலப்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கெலவல்லி, கொங்கரப்பட்டி, தாளநத்தம், குண்டலப்பட்டி, சுங்கரஅள்ளி மற்றும் ராணிமூக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 10 பள்ளிகள், அரூர் ஒன்றியத்தில் எருமியாம்பட்டி, கொங்கவேம்பு, பாப்பநாயக்கன் வலசை, அ.ஈச்சம்பாடி, நாச்சினாம்பட்டி, கணபதிப்பட்டி, வள்ளிமதுரை, சூரநத்தம், ஆண்டியூர், கீழானூர், கொக்கராப்பட்டி, மற்றும் அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 12 பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாப்பம்பாடி மற்றும் குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 2 என தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகளில் இன்று முதல் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மேற்காணும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LKG #TNMinister #KPAnbazhagan
    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNGovtSchools #Sengottaiyan
    காஞ்சிபுரம்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அவர் விஜயேந்திரரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வழக்கருத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரணப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovtSchools #Sengottaiyan
    ×